Mobile

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இது கார்பன் கிரே, ட்விலைட் ப்ளூ, சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் ஓஷன் கிரீன் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எப்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் 450nits பிரைட்நஸ் வசதி கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டதாக உள்ளது.

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 7என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ பிராசஸ்ர் வசதியினைக் கொண்டதாகவும், இது மாலி-ஜி57 எம்சி3 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 (MIUI 12 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும்,மேலும் 18 வாட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5G SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள ஹூவாய் நிறுவனத்தின் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ்.!

TechNews Tamil