Mobile Uncategorised

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

ரெட்மி நோட் 9  ஸ்மார்ட்போன் ஆனது பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று அறிமுகமானது. இந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது மலேசியாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வெளியாகும் என்று உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் கூறப்பட்டது.

மேலும் இதன் விற்பனை அடுத்தவாரம் துவங்கலாம் என்று கூறப்படுகின்றது. ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேல் MIUI 11 கொண்டு இயங்குவதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்ப்ளேவினையும், மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 9  ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி வசதி கொண்டு உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது Wi-Fi, USB Type-C port, Bluetooth, 3.5mm audio jack, NFC, infrared (IR) blaster, GPS, A-GPS போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5,020 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நிறுவனத்தின் ஹார்மனி ஓஎஸ்!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள ஹானர் 20எஸ்!!

TechNews Tamil