மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை அக்வா கிரீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பெபிள் கிரே போன்ற வண்ணங்களில் ஜூன் மாதம் வெளியிட்டது.
தற்போது இந்த மாடல் ஆனது ஸ்கார்லெட் ரெட் நிறத்தில் அறிமுகம் ஆகியுள்ளது. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். இது 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும், பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் வசதியினையும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வசதி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், முன்புறத்தில் 13 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5020 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.