Mobile

முதல் முறையாக விற்பனையினைத் துவக்கிய ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று தனது முதல் விற்பனையினைத் துவக்கியுள்ளது.

1.       4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை- ரூ.12,999

2.       6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை- ரூ.15,999

மேலும் ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது அமேசான், மி.காம், மி ஹோம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் முறையாக விற்பனையினைத் துவக்கிய ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இந்த சியோமி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி மற்றும் 64ஜிபி/128ஜிபி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16எம்பி கேமராவினைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்று அறிமுகமான ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

TechNews Tamil

அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் Oppo Reno Ace!!

TechNews Tamil