Mobile

ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்!!

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையானது அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி எஸ்ஒசி கொண்டு இயங்குவதாக உள்ளது. இந்த சிப்செட் ஆனது அட்ரினோ 618 ஜிபியூ வசதி கொண்டதாக உள்ளது.

அதாவது 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே உடன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட FHD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்!!

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும்  64ஜிபி/128ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, 10. புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இரண்டே நாட்களில் அறிமுகமாகிறது சியோமி மி10 ப்ரோ!

TechNews Tamil