Mobile

களமிறங்கத் தயார்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1080 பிக்சல் தீர்மானத்தினைக் கொண்டதாகவும் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

களமிறங்கத் தயார்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மெமரி அளவினைப் பொறுத்தவரை ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் ரெட்மி நோட் 9 5ஜி ஸமார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

மேலும் இது 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி கேமராவினைக் கொண்டு இருக்கும்.

மேலும் டெலிபோட்டோ லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் கேமரா கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் அறிமுகமானது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது Samsung Galaxy Note 10 Lite!

TechNews Tamil