சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனை M2010J19SC என்ற மாடல் நம்பருடன் உருவாகி உள்ளது. மேலும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினையும், மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் இருக்கும்.
மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 610 GPU, 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும் இருக்கும்.

இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் டெப்த் / மேக்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் இருக்கும்.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார், ஐஆர் சென்சார் கொண்டதாகவும் இருக்கும். இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாகவும் இருக்கும்.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டு இருக்கும்.