Mobile

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

ரூ. 9999க்கு விற்பனையாகி வந்த ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 அதிகரித்து புதிய விலை ரூ.10,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  1.  ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ. 9,999
  2. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.12,999

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

மொபைல் போன்களுக்கு விலை குறைப்பு மட்டும் எப்போதும் அறிவிக்கப்படுவது வழக்கம், வழக்கத்திற்கு மாறாக இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் க்வாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா சென்சார், 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸ், 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார், மேக்ரோ லென்ஸ் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயங்கும் தன்மையானது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை 512 ஜிபி வரை மெமரி நீட்டிக்கலாம்.

இந்த ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டுவதாய் உள்ளது.

இது ரெட்மி நோட் 8 ஆனது ஐஆர் பிளாஸ்டர், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

வியட்நாமில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் Vivo Y19!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான நோக்கியா G20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Diwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ!!

TechNews Tamil