Mobile

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் முன்பதிவில் அதிரடி!

சீனாவில் ரெட்மி நோட் 8 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கான முன் பதிவுகள் தொடங்கியுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோவின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனாகவும், ரெட்மி நோட் 8 முன்னதாக வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் அடுத்த வாரிசை ஸ்மார்ட்போனாக அறிமுகமாக   இருக்கிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாருடன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் முன்பதிவில் அதிரடி!

குறிப்பாக, ரெட்மி நோட் 8 ப்ரோ மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி எஸ் ஓ சி ப்ராசஸருடன் அறிமுகமாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் நான்கு பின்புற கேமராக்கள், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன். ஸ்மார்ட்போனில் 25x ஜூம் ஆதரவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ 4,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் மேலும் கைபேசியில் 18W வேகமான சார்ஜிங் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருப்பதை முன்னிலைப்படுத்த வெய்போவில் இரண்டு ரெட்மி நோட் 8 ப்ரோ கேமரா மாதிரிகளையும் வெயிபிங் வெளியிட்டார். ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Related posts

5 ஜி ஆதரவுடன் அறிமுகமானது IQ Z1X ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது எல்.ஜி. நிறுவனத்தின் டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Samsung Galaxy A70s க்கு ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஆஃபர்கள்!

TechNews Tamil