சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது
1. ரெட்மி நோட் 8 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வகையின் விலை – ரூ.14,999/-
2. ரெட்மி நோட் 8 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை -ரூ.15,999/-
3. ரெட்மி நோட் 8 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை-ரூ.17,999/-
சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது வாட்டர் நாட்ச் டிஸ்பிளேவினையும் கொண்டுள்ளது. இதனுடன் மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் 64ஜிபி, 6ஜிபி ரேம் 128ஜிபி, 8ஜிபி ரேம் 128ஜிபி போன்ற வகைகளில் உள்ளது.
மேலும் கேமராவைப் பொறுத்தவரை 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா,
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ், 2 டெப்த் சென்சார், 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 4,500 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டதாக உள்ளது.