சியோமி நிறுவனம் அதன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் வெளியிட்டது, இந்த ஸ்மார்ட்போன் தற்போது Deep Sea Blue என்ற புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இந்த புதிய வண்ண மாடல் தைவானில் விற்பனை ஆகி வருகிறது.
1. Redmi
Note 8 Pro Deep Sea Blue 6GB + 64GB வகையின் விலை – ரூ. 15,400
2. Redmi Note 8 Pro Deep Sea Blue 6GB + 128GB வகையின் விலை- ரூ. 17,700

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் மற்ற வகைகள் Gamma Green, Halo White மற்றும் Shadow Black shades போன்ற நிற வண்ணங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும் முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இது NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.