Mobile

மற்றுமொரு வண்ணத்தில் வரவுள்ள Redmi Note 8 Pro!!

சியோமி நிறுவனம் அதன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் வெளியிட்டது, மேலும் சமீபத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB டாப் எண்ட் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியது.

அந்தவகையில் தற்போது Ocean Blue நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரவுள்ளதாக சியோமி அதன் அதிகாரப்பூர்வத் தளத்தில் அறிவித்துள்ளது.

  1. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வகையின் விலை – ரூ. 14,999
  2. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – ரூ. 15.999
மற்றுமொரு வண்ணத்தில் வரவுள்ள Redmi Note 8 Pro!!

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும்,  2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

 இது  NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. 

Related posts

செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள Realme XT!

TechNews Tamil

ஆப்பிள் நிறுவனம் கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் ஐபோன் பிரியர்கள்!!

TechNews Tamil

1000 தள்ளுபடி விலையுடன் விற்பனையினைத் துவக்கியுள்ள ஹானர் 9எக்ஸ் !!

TechNews Tamil