சியோமியின், Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- Redmi Note 8 இன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வகையின் விலை – ரூ. 9,999,
- Redmi Note 8இன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வகையின் விலை -ரூ. 12.999
இந்த ஸ்மார்ட்போன்கள், Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளுக்கு ரூ. 500 வரை கேஷ்பேக், எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் போன்றவை கிடைக்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.39 இஞ்ச் full-HD , அதாவது 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக்
கொண்டதாக
உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கேமராவினையும், முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமராவினையும் கொண்டு உள்ளது.
மேலும் இது microSD card மூலம் 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.