Mobile

நவம்பர் 29 முதல் Cosmic Purple நிறத்தில் Redmi Note 8 !

ஜியோமி நிறுவனமானது கடந்த மாதம் Redmi Note 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது மலிவான விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருந்ததால் இந்த ஸ்மார்ட்போன் பில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் Redmi Note 8 ஸ்மார்ட்போன் Cosmic Purple கலர் வேரியண்ட் நவம்பர் 29 முதல் விற்பனைக்கு வரும் என்றும் ஜியோமி அறிவித்துள்ளது.

  1. Redmi Note 8 இன் 4GB RAM + 64GB வகையின் விலை – ரூ. 9,999
  2. Redmi Note 8 இன் 6GB RAM + 128GB வகையின் விலை – ரூ. 12,999
நவம்பர் 29 முதல் Cosmic Purple நிறத்தில் Redmi Note 8 !

 இந்த Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.5D curved glass பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 6.39 இஞ்ச் full-HD உடன் 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இது octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை rear கேமரா அமைப்பு, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் microSD card வழியாக 512GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது, மேலும் இது fingerprint சென்சார் கொண்டதாக உள்­ளது.

இது 4,000mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil

செப் 24 இல் வெளியாகிறது சியோமி 108MP Camera!!!

TechNews Tamil