இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் எதிர்பார்க்காத அளவிலான விற்பனையினை ஜியோமியின் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்களை சந்தித்துள்ளன.
அதாவது இந்த 2 ஸ்மார்ட்போன்களும் ஒரு மில்லியன் யூனிட் அளவில் விற்பனை ஆகியுள்ளன.
Redmi Note 8 Pro:

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இது NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
Redmi Note 8:
இந்த ஸ்மார்ட்போன் 6.39 இஞ்ச் full-HD , அதாவது 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கேமராவினையும், முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமராவினையும் கொண்டு உள்ளது.
மேலும் இது microSD card மூலம் 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது. இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.