ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் பல சிறப்பு சலுகைகள் வரவுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஸ்மார்ட்போன்களைப் பற்றிய அறிவிப்பினைத் தான்.
ஃப்ளிப்கார்ட்ட்டும் வாடிக்கையாளரின் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் வகையில், ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு விலைக்குறைப்புகளை செய்துள்ளது.

அதாவது ரெட்மி நோட் 7எஸ் மொபைல் போன், ரூ. 8,999-க்கு விற்பனைக்கு ஆகவுள்ளது.
இந்த தள்ளுபடி செப்டம்பர் 29 ம்தேதி தொடங்கி அக்டோபர் 4 ம்தேதி வரை கிடைக்கும்.
ஃப்ளிப்கார்ட்டில் Flipkart Plus Users க்கு செப்டம்பர் 29 ஆம்தேதி இரவு 8 மணி முதல் இந்த ஆஃபர் கிடைக்கும்.
மேலும் ஆக்சிஸ் பேங்கிக்டெபிட், கிரடிட் கார்டு, ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் கார்டுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
ரெட்மி நோட் 7 எஸ் ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம்களுடன், திரை அளவு 6.3 இன்ச் அளவு இருக்கக் கூடியதாக உள்ளது. இதன் பிக்சல் தீர்மானமானது முழு எச்.டி. 1080×2340 பிக்சல்கள் கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப் ட்ராகன் 660 கொண்டதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் கொண்டிருக்கும். மேலும் உள்ளடக்க மெமரி 32 மற்றும் 64 ஜிபிக்களில் என இரண்டு வகையாக உள்ளது.