மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 13எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.
மெமரி அளவாக ரெட்மி நோட் 11எஸ் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
பேட்டரி அளவாக ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் கொண்டுள்ளது.