Mobile

இந்தியாவில் வெளியானது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 20:9 திரைவிகிதம், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் வெளியானது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் மாலி-ஜி76 3EEMC4 GPU ஆதரவு கொண்டதாக உள்ளது. மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் அசத்தலான ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

TechNews Tamil

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் iQoo Z5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil