Mobile

சீனாவில் சிறப்பான அம்சங்களுடன் வெளியான ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் இது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

சீனாவில் சிறப்பான அம்சங்களுடன் வெளியான ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்!

இந்த ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இயங்குதளம் என்று கொண்டால் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவாக 48எம்பி மெயின் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இரட்டை சிம், 4 ஜி, என்எப்சி, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் வரவுள்ள Oppo Reno 3!

TechNews Tamil

Tecno நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Camon 16 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது போக்கோ சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil