Mobile

சூப்பரான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 லைட் 6.67 இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

சூப்பரான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பாக 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 12 கொண்டு இயங்குவதாக உள்ளது.

Related posts

10,000 முதல் 20,000 வரை விலை குறைந்த ஐபோன்கள்!!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil