Mobile

சீனாவில் ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் சீனாவில் ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி கே50 ப்ரோ 6.67 இன்ச் Samsung-made OLED 2K டிஸ்பிளே வசதி, டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டுள்ளது.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் 4என்எம் மீடியாடெக் Dimensity 9000 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128/256ஜிபி/512ஜிபி மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 100எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் முன்புறத்தில் 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே50 ப்ரோ 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, வைஃபை 6, புளூடூத் வி5.3, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

இலவச ரிப்பேர் செய்துதர திட்டமிட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil