மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் (அக்டோபர் 27 ஆம் தேதி) நாளை அறிமுகமாகின்றது. இந்த ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 6.67 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி மற்றும் டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத அளவிலான டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் அம்சத்தினை பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.

மேலும் இது 5ஜி ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 12 ஜிபி எல்பிபிடிஆர்5 ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
மேலும் 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W வேகமான சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 20 மெகாபிக்சல் செல்பி கேமரா ரெட்மி கே 30 எஸ் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா, முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.