Mobile

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது ரெட்மி K30 ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி K30 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி K30 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி K30 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் விற்பனையினைத் துவக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இந்த ரெட்மி K30 ஸ்மார்ட்போன் மூன்லைட் வயிட், மிட்நைட் பிளாக், மினட் கிரீன் என்ற 3 வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ரெட்மி K30 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது ரெட்மி K30 ஸ்மார்ட்போன்!!

ரெட்மி K30 ஸ்மார்ட்போன் மீடியா டெக் 7nm  மற்றும் ஸ்நாப்டிராகன் பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை ரெட்மி K30 ஸ்மார்ட்போன்
பின்புறத்தில் 64MP பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு, முன்பக்கத்தில் 20 மெகா பிக்சலுடன் பாப் அப் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

4,500 mAh  பேட்டரி சக்தி கொண்டதாக உள்ளது, மேலும் 33W ஃபாஸ்ட் சார்ஜ் வசதியினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொருத்தவரை டைப் சி போர்ட் வசதியினையும், ஆடியோ ஜூம் வசதியினையும் கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா மோட்டோ ஜி8 பவர் லைட்!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil