Mobile

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகமானது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.    ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் 6+128 ஜி.பி. மாடலின் இந்திய விலை- ரூ. 32,250

இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன்  டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

இது ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளது,  இந்த ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 650 GPU வசதி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது  MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் இயங்குவதாய் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை  64 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 13 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் லென்ஸ் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 20 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது  வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53) கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரையும், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை ரெஸ் ஆடியோ, 1216 ஸ்பீக்கர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி SA/NSA டூயல் 4டி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, GPS, யு.எஸ்.பி. டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

மலிவு விலையில் மலேசியாவில் அறிமுகமானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள விவோ Y1s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil