Mobile

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

ரெட்மி நிறுவனம் மார்ச் 24 ஆம் தேதி தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையானது கூடுதலான விலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

மேலும் இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டிருக்கும் என்றும், இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டிருக்கும்.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டதாக இருக்கும் என்றும். இது, முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற ஆதரவுகளைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கலாம்.

Related posts

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

TechNews Tamil