சியோமி நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. பலருக்கும் பிடித்தமான அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் இது முதல் இடத்தில் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சிறப்பான அளவில் எதிர்பார்க்காத வரவேற்பை பெற்றன.
தீபாவளி சேலில் ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைத்துள்ளது.

அடுத்து சியோமி, ரெட்மி கே 30 யினை வெளியிட உள்ளது. அதாவது
தற்போது ரெட்மி
கே 30 குறித்த டீஸர் வெளியாக உள்ளது.
ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனில் டூயல் பன்ச்-ஹோல் வடிவமைப்பு காணப்படும், அதாவது முன்பக்கத்தில் 2 செல்பி கேமராக்கள் இதில் இருக்கும்.
மேலும் யாருமே எதிர்பார்த்திராத வகையாக ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனில் 5 ஜி ஆதரவு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி
உள்ளன. சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ரெட்மி கே 30 ஆகும்.
இது எப்போது வெளியாகும் என்று 5 ஜியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டு
உள்ளனர்.