மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி K30 என்ற 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
ரெட்மி K30 ஸ்மார்ட்போன் ஃப்ரோஸ்ட் வயிட் மற்றும் மிஸ்ட் பர்பிள் ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது. ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ரெட்மி K30 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தினைக் கொண்டுள்ளது.
6.67 இன்ச் திரை அளவினைக் கொண்டதாகவும், ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரிலா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.
பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள், 64MP பிரைமரி கேமராவில் சோனி IMX686 சென்சார் கொண்டதாகவும், முன்புறத்தில் 20 மெகாபிக்சலினைக் கொண்ட செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
ரெட்மி K30 5G ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் விரல் ரேகை சென்சாரினைக் கொண்டதாகவும், 4,500mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாக உள்ளது.