ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!
Mobile

ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தற்போது ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு பொங்கலை ஒட்டி விலைக் குறைப்பினை அறிவித்துள்ளது.

1.         ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.21,999 (2000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.19,999

2.         ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.23,999 (1000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.22,999

ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி ரியர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இதேபோல் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொருத்தவரை 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

கசிந்தது ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்!!

TechNews Tamil

களமிறங்க உள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்!!

TechNews Tamil