Mobile

ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் ரெட்மீ K20, K20 ப்ரோ, 7A, ரியல்மீ X, 3i விற்பனை!!

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று ‘சூப்பர் ஃப்ளாஷ் சேல்’ ஒன்றை அறிவித்துள்ளது. ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro, ரெட்மீ 7A, ரியல்மீ X, ரியல்மீ 3i, என ஐந்து ஸ்மார்ட்போன்கள் இந்த சூப்பர் ஃப்ளாஷ் சேலில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28, அதாவது ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவதாக ரெட்மீ K20 Pro. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.

ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் ரெட்மீ K20, K20 ப்ரோ, 7A, ரியல்மீ X, 3i விற்பனை!!

ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனையாகவுள்ளது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமானது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ‘ரியல்மீ 3i’ ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு ‘ரியல்மீ 3i’ ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

Related posts

அறிமுகமானது ஹூவாய் நிறுவனத்தின் ஹார்மனி ஓஎஸ்!

TechNews Tamil

கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் புக்கிங்க் ஆரம்பம்!!

TechNews Tamil

மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil