Gadgets

சீனாவில் அறிமுகமானது ரெட்மி டிஸ்பிளே 1ஏ மானிட்டர்.!

சியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்போது புதிய ரெட்மி டிஸ்பிளே 1ஏ மானிட்டரை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் ஆகும் என்று கூறப்படுகின்றது. இந்த ரெட்மி மானிட்டர் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ரெட்மி மானிட்டர் 3 மைக்ரோ-எட்ஜ் டிஸ்பிளேவினையும் மேலும் 7.3 எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.

கண்களை பாதுகாக்கும் வகையில் ரெட்மி 1ஏ மானிட்டர் ஆனது புளூ லைட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது 178 டிகிரி வியூவிங் ஆங்கில் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது ரெட்மி டிஸ்பிளே 1ஏ மானிட்டர்.!

இந்த டிஸ்பிளேவானது 23.8 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் மற்றும் 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக பின்புறத்தில் பவர் பட்டன், எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் கொண்டும், இந்த புது ஸ்மார்ட் டிவி 4 கே டிஸ்ப்ளேவினைக் கொண்டும் உள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

ஆடியோ அனுபவத்திற்காக 12.5W ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு ட்வீட்டர்கள் உட்பட எட்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இது டால்பி ஆடியோ மற்றும் சரவுண்ட் ஒலி ஆதரவினையும் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது சியோமியின் மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

Redmi 7A: ஆறாயிரம் ரூபாய்க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போன்!

TechNews Tamil