Gadgets

ரூ.1100 விலையில் அடடா எனக்கூற வைக்கும் அம்சங்களுடன் ரெட்மி பேண்ட் அறிமுகம்!!

ரெட்மி பிராண்டின் ஸ்மார்ட் பேண்ட் மாடலானது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் பேண்ட்டின் அம்சங்கள் அசரவைக்கும் வகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்பேண்ட் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

1. புதிய ரெட்மி பேண்ட் விலை – ரூ. 1100 (இந்திய மதிப்பில்)

இந்த ரெட்மி பேண்ட் 1.08 அங்குல கலர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஐந்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ரூ.1100 விலையில் அடடா எனக்கூற வைக்கும் அம்சங்களுடன் ரெட்மி பேண்ட் அறிமுகம்!!

இதில் உள்ள டையல் ஃபேஸ்கள் 70 வகைகளில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில் நான்கு வித ரிஸ்ட்பேண்ட் ஆப்ஷன்களும் உள்ளன.

மேலும் இந்த பேண்ட் ஆனது டையல் ஃபேஸ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக யு.எஸ்.பி. கனெக்டர் உள்ளது, இந்த ரெட்மி பேண்ட் யு.எஸ்.பி. பிளக் மூலம் சார்ஜ் செய்யும் அம்சம் கொண்டதாக உள்ளது. மேலும் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது.

.இந்த ரெட்மி பேண்ட் இந்தமாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Related posts

பேம்பர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘ஸ்மார்ட் டயப்பர்’

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகமாகியுள்ளது சோனியின் பிரீமியம் மாடல் சவுண்ட்பார்!!

TechNews Tamil

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil