Gadgets

128 சாதனங்களை இணைக்க உதவும் ரெட்மி ரூட்டர்!!

கொரோனாத் தொற்று உலகம் முழுவதிலும் தலை விரித்தாடும் நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் மட்டும் வழக்கம்போல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. அதாவது ஊழியர்கள் இணையத்தினைக் கொண்டு வீட்டிலேயே work from home முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று, இணைய வசதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களே ஆகும். தற்போது அதனைத் தீர்க்கும் வகையில் ரெட்மி நிறுவனம் ஒரு பவர்ஃபுல் ரூட்டரை சீனாவில் வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த ரூட்டர் மூலம் மொபைல், லேப்டாப், டேப், கணினி என 128 சாதனங்களை இணைத்துப் பயன்படுத்த முடியும்.  ரெட்மி ஏஎக்ஸ் 5 வைஃபை 6 ரூட்டர் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

128 சாதனங்களை இணைக்க  உதவும் ரெட்மி ரூட்டர்!!

வைட்-ஃபை 6 இணைப்பை ஆதரிக்கும் ரெட்மியின் முதல் ரூட்டர் இது என்ற பெயரினைப் பெற்றுள்ளது. அதிவேக நெட்வொர்க் இணைப்புக்காக நான்கு பெருக்கி ஆண்டெனாக்களைக் கொண்டுள்ளது.

அதாவது, இந்த ரெட்மி ஏஎக்ஸ் 5 வைஃபை 6 ரூட்டர் 1775 எம்.பி.பி.எஸ் வரை வேகத்தை வழங்குவதாகவும், ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர்கள், பாதுகாப்பு கேமராக்கள் போன்ற சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய மீடியாபேட் எம்5 லைட் சாதனம்!

TechNews Tamil

மலிவான விலையில் 4 புதிய Mi டிவிக்கள் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil