சியோமி நிறுவனம் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன், 6.53′ இன்ச் கொண்ட வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

கேமரா அம்சத்தினைப் பொறுத்தவரையில், குவாட் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது.
கூடுதலாக மூன்று உயர்திறன் கொண்ட கேமரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
மேலும் சியோமியின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 4 ஜி ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.