மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் அளவினைக் கொண்டதாகவும், மேலும் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி அளவினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டும் உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், 10 வாட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.