சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட மொபைல் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி தற்போது அதன் பிரத்தியேக ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனை தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மிகவும் மலிவு விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டினை எதிர்பார்த்து மற்ற நாடுகளின் பயனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினை 1600 ஒ 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் IMG PowerVR GE8320 GPU வசதியினையும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி கேமராவையும், முன்புறத்தில் 5 எம்பி கேமராவையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது, மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.