சியோமி நிறுவனம் ரெட்மி 9A ஸ்மார்ட்போனை சீனாவில் ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது மேம்படுத்தப்பட்டு இரண்டு வேரியண்டுகளில் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை – 6,799 ரூபாய்
ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை – 7,499 ரூபாய்
ரெட்மி 9A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10, MIUI 12 சாப்ட்வேர் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ ஜி25 SoC பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5,000 mAh பேட்டரி கொண்டதாகவும், மேலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும்
உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 13 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சலுடன் கூடிய செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி LTE, வைஃபை, 3.5mm, மைக்ரோ யுஎஸ்பி, ஃபேஸ் அன்லாக் வசதி போன்றவற்றினைக்
கொண்டு உள்ளது.