Mobile

தயார்நிலையில் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!!

ரெட்மி நிறுவனம் தற்போது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

தயார்நிலையில் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியுடன் உடன் மாலி ஜி52 ஆதரவைக் கொண்டுள்ளது, ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகத்திற்குத் தயாரான நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன்!!!

TechNews Tamil