ரெட்மி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவினையும் கொண்டிருக்கும். மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் கொண்டும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டும் வரும் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி70எஸ்ஒசி சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். கேமராவினைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவை இருக்கும்.
மேலும் இது 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக இருக்கும்.