Mobile

இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், பச்சை போன்ற வண்ணங்களில் வெளியாகும் என்று தெரிகின்றது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஏச் பேட்டரி கொண்டதாகவும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ள Mi நோட் 10 !!

TechNews Tamil

விரைவில் வரவுள்ள Oppo Reno 3!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil