மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், ஃபியரி ரெட், எலெக்ட்ரிக் க்ரீன் மற்றும் ப்ளேஜிங் பச்சை வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும், மேலும் 2340×1080 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டுள்ளதாக உள்ளது.

இந்தநிலையில் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டதாக உள்ளது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி அளவுகளில் வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு செய்யக்கூடியதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா கொண்டதாகவும், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மேலும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.