சியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தகவலாகும்.
இந்த ஸ்மார்ட்போன் மிகக் குறைவான விலையில் அதிக வசதிகளைக் கொண்டிருக்கும் என சொல்லப்பட்டதால், பயனர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இதில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதியும் அடக்கம், மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு செயல்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருக்கும்.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமிரா 12எம்பி கேமராவாக் இருக்கும், பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்றவையும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்.
இதில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன், வைஃபை, ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடங்கியுள்ளது.