சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி தனது ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்துகிற வகையிலான, பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு உள்ளனர். வாடிக்கையாளர்கள் பலரும் இதன் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளனர்.

மேலும் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆகியவையும் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 12எம்பி ரியர் கேமரா உள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவையும் இதில் அடக்கம்.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இது இயங்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, கூடுதல 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக உள்ளது.
.இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இதனுடன் வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவையும் உள்ளது.