ரெட்மி 8A ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 2 பின்புற கேமராக்கள், பின்புற பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது என்பதை இந்த புகைப்படங்கள் காண்பிக்கிறது.
மேலும் சமீபத்தில் வெளியான் தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான பேட்டரி, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம்.

மேலும் பின்புறத்தில், பிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றுள்ளதும் இதில் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.0GHz வேகத்துடன் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட வகையில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
TENAA டேட்டாபேஸின் தகவலின்படி, இந்த ‘ரெட்மி 8A’ ஸ்மார்ட்போன் 6.217-இன்ச் HD+ (720×1520 பிக்சல்கள்) திரை, 19:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2GB + 16GB, 3GB + 32GB, மற்றும் 4GB + 64GB என மூன்று வகைகளில் அறிமுகமாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.