Mobile

ரூ.7,100 ரூபாயில் அறிமுகமானது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்!

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் துவக்க விலை -(இந்திய மதிப்பில்) ரூ.7,100

இந்த சியோமி ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1500 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டும் உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ரூ.7,100 ரூபாயில் அறிமுகமானது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த சியோமி ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஹானர் நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி வெளியிட உள்ள ஹானர் வி40!!

TechNews Tamil

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் Oppo Reno Ace!!

TechNews Tamil