Mobile

இன்னும் 2 நாட்களில் விற்பனையினைத் துவக்க உள்ள ரெட்மி 8ஏ டூயல்!

ரெட்மி நிறுவனம் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1.   ரெட்மி 8ஏ டூயல் விலை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை–ரூ.6,499

2.   3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் விலை- ரூ.6,999

இந்த ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் விற்பனையினைத் துவக்க உள்ள ரெட்மி 8ஏ டூயல்!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக்  கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை  யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ்!

TechNews Tamil

அதிரடியாக இன்று அறிமுகமான Vivo V17 Pro!

TechNews Tamil

இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகமானது Vivo X50 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil