Mobile

மீண்டும் விற்பனையைத் துவக்க உள்ள ரெட்மி 8 ஸ்மார்ட்போன்!!


ரெட்மி நிறுவனம் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மீண்டும் துவக்கவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் Mi.Com என்ற வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

  1. ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.7,999
  2. ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.8,999

இந்த ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மீண்டும் விற்பனையைத் துவக்க உள்ள ரெட்மி 8 ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி முதன்மை கேமரா, 2எம்பி இரண்டாவது கேமரா, போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தினைப் பொறுத்தவரை இது 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது,

மேலும் 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ்இ3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ளது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ஐரோப்பாவில் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil