ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகளவில் முன்னனி நிறுவனமாக சியோமி நிறுவனம் ஜூலை 3ம் தேதி, 6000 ரூபாய்க்கு ரெட்மி 7A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ரெட்மி 7A ஸ்மார்ட்போனில், இதுவரையில் குறைந்ததது 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தான் நல்ல ஸ்மார்ட்போன்கள் இருந்தன. ஆனால், தற்போது ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ள 7A ஸ்மார்ட்போன் மற்ற போன்களை விட சிறந்த அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

அறிமுக சலுகையாக, 2ஜிபி ரேம், 16ஜிபி மெமரி கொண்ட போனின் விலை 5,799 ரூபாய் என்றும், 2ஜிபி ரேம் 32ஜிபி மெமரி கொண்ட போனின் விலை 5,999 ரூபாய் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு வேரியண்டுக்கும் வெறும் 200 ரூபாய் தான் வித்தியாசம். எனவே, ரெட்மி 7A போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தாராளமாக 32ஜிபி மெமரி உள்ளதை வாங்கலாம்.
நேற்று முன் தினம் முதல் ரெட்மி 7A ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.