சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அதிக தொழில்நுட்ப வசதியினைக் கொண்டிருப்பதால், பெரிய அளவிலான வரவேற்பினைப் பெற்றுவருகிறது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விரைவில் அப்டேட் குறித்த தகவலை வெளியிடும் என்றும் தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் உடன் அட்ரினோ 512ஜிபியு கொண்டுள்ளது
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி ISOCELL Bright GM1 சென்சார், 5எம்பி டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் 13எம்பி செல்பீ சென்சாரைக் கொண்டுள்ளது.
இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி
3.5எம்எம் ஆடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.