Gadgets

சீனாவில் களம் இறங்கியது ரெட்மி 65 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

சீனாவில் ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி ஏ65 என்ற 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியின் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

அதாவது இந்த டிவி  65 இன்ச் என்ற அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ65 மாடல் ஆனது 4கே தீர்மானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

சீனாவில் களம் இறங்கியது ரெட்மி 65 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

மேலும் இது குறுகிய பெசல்களைக் கொண்டதாகவும், மேலும் ஏ65 ஸ்மார்ட் டிவி MIUI மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

ரெட்மி ஏ65 மாடல் 4கே 3,840×2,160 பிக்சல்கள் தீர்மானம் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 178 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி 64 பிட் குவாட்-கோர் கோர்டெக்ஸ்-ஏ 53சிபியு மற்றும் மாலி ஜி52 ஜிபீயூ வசதி கொண்டுள்ளது. மேலும் இது எச்டிஆர் ஆதரவைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 1.5ஜிபி ரேம் மற்றும் மற்றும் 8ஜிபி உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் 2.4GHz வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஒரு எஸ் எஸ்/பி.டி.ஐ.எஃப் போர்ட் மற்றும் ஏவி போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி டி.டி.எஸ்-எச்டியை ஆதரிக்கும் இரண்டு 8வாட் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. மேலும் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குவதாகம், மேலும் 3.0க்காக MIUI மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது சோனி நிறுவனத்தின் Sony BRAVIA X9000H சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள்!!

TechNews Tamil

ரூ.21,400 மதிப்பிலான ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

TechNews Tamil

இந்தியாவில் 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளியீடு!

TechNews Tamil