Mobile

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி 10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு, 20:6:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

ரெட்மி 10 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

32 எம்பி செல்பி கேமராவுடன் வெளியான கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி!

TechNews Tamil

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil